Thursday, October 22, 2009

'ஈரம்' என்றொரு படம்..








'பேய் படம்',' திகில் படம் ' என்று முத்திரை குத்தப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். என்னால் இதனை இந்த வரையரைக்குள் பார்த்து திருப்தி அடைய முடியவில்லை. எனது கண்ணோட்டத்தை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன். என் மனதில் பதிந்த பல விஷயங்கள் இப்படத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் ஆனந்திக்கிறேன்...


1. ஈரமில்லா மனிதர்கள்

தனக்கென்று ஒரு பிரச்சனை வருகையில் எப்படி மனிதர்கள் மனதில் ஈரமி
ல்லாமல் மாறிவிடுகிறார்கள் என்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கதாபாத்திரங்கள் மூலம் விளக்கியிருந்தார் இயக்குனர். கலியுகத்தின் மக்களைப்பற்றி புராணங்களில் தீய குணங்கள் மேலோங்கி இருக்குமெனக் கூறி இருப்பார்கள். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புப் பெண்ணும், பெரியவரும், அடுதவர் குடும்பத்தைக் கெடுக்கிறோமே என்ற குற்ற உணர்வில்லாத காவலாளி, நண்பர், விடலைப்பெண் என்று அனைத்துக் கதாபாதிரங்களுமே இன்றைய வாழ்வில் நாம் காணும் அத்தகைய மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றனர்.நமது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. ஆனால் அப்பிரச்சினைகளில் மற்ற மனிதர்களின் பங்கு இப்படத்தில் தோன்றுபவர்களைப் போன்றே இருக்கின்றது.


2. வாழ்க்கைத்துணையின் மீதான சந்தேகம்





இயக்குனர் இந்தப் படத்தில் கூற வந்த கருத்து... கணவர்களின் சந்தேகம் பற்றியது. ஒரு பெண் அறிவு முதிர்ச்சி அடையாத, மனம் தடுமாறும் இளம் பருவத்தில் காதல் வயப்பட்டிருக்கலாம் அல்லது முதிர்ச்சியுடன் கூடிய காதலாக இருந்ததாலேயே பல வே
று முக்கிய காரணங்களுக்காக அந்தக் காதலைத் துறந்திருக்கலாம். ஒரு காலத்தில் ஒருவனைக் காதலித்ததால் மட்டுமே அவள் தவறான பெண்ணாக முடியாது. நல்ல காதலிகள் மிகவும் குறைவு தான் ! ஏனெனில், நல்ல மகள்களும், நல்ல மனைவிகளும், நல்ல தாய்மார்களும் உருவாக பல கெட்ட காதலிகள் தேவைப்படுகிறார்கள். ஒரு கெட்ட காதலி உங்களுக்குச் சிறந்த மனைவியாக விளங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை உங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவை வைத்துத் தீர்மானியுங்கள். மற்ற உறவுகள் அல்லது நண்பர்களின் வார்த்தைகளை வைத்து அல்ல என்பதை இயக்குனர் ஆணித்தரமாக வலியுறுத்தி இருக்கிறார்.

3. கதாநாயகி


ரம்யா, இந்தக் கதையின் நாயகி. மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவள். அன்புக்குக் கட்டுப்பட்டவள். அதனாலேயே தந்தைக்குக் கட்டுப்பட்டவள். சுருக்க
மாக மிகவும் நல்லவள். பிறர் தன்னை ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிடக்கூடாது என்ற நன்னடத்தை கொண்டவள்.கோபத்தில் தன்னைக் காதலன் தவறாக ஒரு வார்த்தை பேசியதால் அந்த ஒன்றுக்காகவே காதலை விடுத்தவள். ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால்: A soft girl with a very strong positive character. இதனாலேயே இந்தப் பாத்திரப் படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது . நம்மைச் சுற்றி பல நல்ல பெண்கள் இருந்தாலும் ரம்யாவின் அளவு உறுதியும், தெளிவும் உள்ளதா என்பது என்னை யோசிக்க வைத்த விஷயம். தான் தவறானவள் அல்ல என்பதை நிரூபித்த விதம் சினிமாத்தனமாக இருந்தாலும் அவளது குணத்தை ஒட்டியே அமைந்ததால் படத்திற்கு அதுவே மதிப்பைக் கூட்டுகிறது. 

4. கதாநாயகன்

வாசு எனும் போலீஸ் அதிகாரி வாசுதேவன். இந்தக் கதையின் முக்
கியமான தூண். இப்படத்தின் பிரதானமான கதாபாத்திரம். காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழும் துடிப்பான இளைஞன்.அமைதியும், அழகும், குணமும் ஒரு சேர அமைந்த ரம்யாவை விரும்பிக்காதலிப்பவன். ( ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால்: Someone who not only just loves Ramya, but admires her for her character).கோபத்தில் தன்னை விட்டுப் பிரிந்தாலும் , அவள் கோபத்திலுள்ள நியாயத்தை மதிப்பவன். பிணமாக வளைக் கண்டபின்னும், அவள் தன முன்னாள் காதலி என்பது தெரிந்தால் அவளுக்கு அவப்பெயர் வரக்கூடும் என்று அவளைத் தெரியாது என்று கூறுவதும், பின்னர் அவளது மரணம் கொலை அல்ல என்று ஊர்ஜிதம் செய்யாமல் போனால், அது அவளுக்கும், தன காதலுக்கும் செய்யும் துரோகம் என்று எண்ணி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும் அவன் ரம்யாவின் மீது கொண்ட ஆழமான அன்பிற்குச் சான்றுகள்.


  எந்த அடிப்படையோ, ஆதாரங்களோ இன்றி, தான் ரம்யாவின் மீது கொண்ட நம்பிக்கையை மட்டுமே கொண்டு வழக்கை விசாரிப்பது அவன் மீதான மதிப்பை மேலும் கூட்டுவதாக அமைகிறது. மரணங்கள் தண்ணீரால் ஏற்படுகின்றன என்பதையும், மரணமடைவோர் ரம்யாவின் சாவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று முடிவெடுப்பதிலும் அறிவுக்கூர்மை உள்ளவனாக மிளிர்கிறான். தன்னை வெறுப்பவராக இருந்தாலும் ரம்யாவின் தந்தையின் சிகிச்சைக்கு உதவுவதும், ரம்யாவின் தங்கையைக் காக்க முனைவதிலும் மனிதாபிமானமுள்ள மனிதனாகக் காணப்படுகிறான். மொத்தத்தில் வெறும் சேட்டைகள் புரியும் சினிமாக் கதாநாயகர்கள்போலல்லாமல் உண்மையான, கதைக்கேற்ற எதார்த்த நாயகன் இந்த வாசுதேவன்.


5. திரைக்கதை


திகில் கதையாக இருந்தாலும், சொல்லப்பட்ட விதம் புதுமையானது. கோரம், மாயாஜாலமின்றி ஓர் யதார்த்தமான ஆவியைப் பார்க்க முடிந்தது. திரைக்கதை கூறப்பட்ட விதம் பாராட்டப் படவேண்டியது.


இன்றைய நாளில், வாசு ஏற்கனவே அறிமுகமான ரம்யாவை( ரம்யாவின் பிணத்தைப்) பார்த்து 'தெரியாது' என்று கூறுவது போல் ஒரு காட்சி. தொடரும் பழைய நினைவுகளில், ஏற்கனவே தெரியாத ரம்யாவைத் ' தெரியும் ' என்று கூறி ஒரு இக்கட்டில் இருந்து அவளைக் காப்பாற்ற, அதன் மூலமே அவர்கள் நட்பு தோன்றுவது போன்ற காட்சி. இது போலவே ஐஸ்கிரீம் பார்லர், சாப்பாடு, திருச்சியின் தில்லை நகர் என்று இந்நாளின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வாசுவின் பழைய நினைவுகளைக் கூறுவதும் நல்ல திரைக்கதை அமைப்பு.


சிவப்பு, தண்ணீர் இவற்றை வாசு பார்க்க நேரிட்டால் ஆவியால் மரணம் நிகழும் திரைக்கதையில், படம் முடிவடையும் நேரத்தில் சிவப்புக் குடையும், அதிலிருந்து சொட்டும் மழைத்துளிகளும் ஆவியின் அடுத்த பலியைக் குறிப்பால் மட்டுமே உணர்த்தி முடித்துவிடுகிறார் இயக்குனர்.


ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு வந்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு !





10 comments:

Jai T said...

Ultimate review of the movie.. i shld say u have a gr8 writing style... i like the review as i liked the movie ;)

continue ur good work.. hoping to see ur work in the magazines in the future ;) all the best

நதியின் ஓசை said...

Thanks for your comments!

Anonymous said...

Hey, this is viji, your writing is a pleasure to read and not superficial, keep up the good work.
I am going to watch eeram movie after your review...
And how do you write in tamil, did you learn to type in tamil in the english keyboard?

Anonymous said...

On Diwali day, I saw some scenes of this movie in a TV review and got scared. I live in US. I called my sister and asked why they are shooting such negative scenes in Tamil movie now. The scene I saw was that neighbor trying to switch the mixie on, with no power supply, but eventually power supply and water comes up and causes some accident. She said I saw only part of the scenes but the movie is too good. I think I was over scared because of being here in US. :-) that small little things that were cool for me in India are all scary now...:-)

I know you're an excellent thinker and a good writer.Nalla irukku, ezhuthu nadai. Keep writing.
I like your grouping of details in that vimarsanam, as Jai T's comments says it is the best review given to that movie. I agree too, though I read in many sites getting interested in the movie, I didn't get good hold until I heard it thru Nadhiyinosai. I will definitely watch the movie.

Ponna

Dr.Rudhran said...

neat. i felt the same with the film and recommended to my friends.
i expect more from you, best wishes.

வால்பையன் said...

மனைவி மீது மட்டுமல்ல, பொதுவாக சந்தேகப்படுவதே பாராநய்டு என்று பிறிக்கப்படுகிறது!
முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களும் இதில் அடங்குவர்! இந்த படத்தின் நாயகன் அந்த கேஸ் தான்!

ரெண்டாவது ஆதி அவள் மேல் கொண்ட நம்பிக்கையில் கேஸை நடத்துவது, அது உங்களுக்கு மதிப்பளித்திருக்கலாம், அதை தான் இயக்குனரும் எதிர்பார்த்தது, கடைசி வரைக்கும் தப்பையே செய்து கொண்டிருக்கும் நாயகனை பொதுபுத்தி கொண்டவர்கள் ஏற்று கொள்வதில்லை,(உதாரணம்-பருத்திவீரன்), நாயகன் அப்படி செய்யவில்லையென்றாலும் நாயகி ஆவியாக வந்து அவனை கொலை செய்து விடுவாள் என்பது தானே கதை!

அதற்கு எதுக்கு சரண்யா மோகனை எல்லாம் வறுத்தெடுக்கனும்!

ஈரம் படத்தின் மேல் எனக்கு நிறைய விமர்சனம் இருக்கிறது, நான் விரிவான விமர்சனமெல்லாம் எழுதுவில்லை என்பதால் விட்டுவிட்டேன்!

Selva said...

உங்கள் கருத்துகளோடு மருத்துவர் ருத்ரன்-அவர்களும் நல்ல படம் னு சொல்லும் பொது பார்த்துட வேண்டியது தான்.நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

Very detailed review and insights...All the best for your future blogs.

Anonymous said...

Narmadha...you need to moderate the comments

nithya said...

hi da.. i wish you to come up and shine as a beatiful star.. your loving friend Nithya..

Post a Comment